Jul 15, 2013

விண்டோவிற்கு மாற்றாக லினக்ஸ் இருக்க முடியுமா ? ஒரு சிறப்பு பார்வை !


        நம் கணிணி இயங்க இயங்கும் மென்பொருள்(Operating System) தேவை , அது நிச்சயம் மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனத்தின் விண்டோ  இயங்கும் மென்பொருளை(Window OS) நிறுவிஇருப்போம். அதை தவிர மாக் (mac OS x)நிறுவனத்தின்  இயங்கும் மென்பொருள்ஆப்பிள் இருக்கிறது.இது இரண்டுமே கட்டண மென்பொருட்கள் .இதை தவிர லினக்ஸ்(Linux) இயங்கு தளம் இருக்கிறது.இது முற்றிலும் இலவசமான மென்பொருள் தொகுப்பு.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோ 8.1 (Window Blue)பழைய இடைமுகதொடு புதிய சோதனை பதிப்பு அண்மையில் வெளியிட்டது .கட்டண மென்பொருட்கள் எல்லாம் 3 மாதம் வரை தான் பயன்படுத்த முடியும்.ஆனால் இந்த முறை ஐந்து மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.லினக்ஸ் இலவசமான மென்பொருள் தொகுப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை  அசைத்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது .


         மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பதிப்பு உரிமை அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். உலகில் உள்ள  இல்  முக்கால்வாசி கணிணிகள் விண்டோ  இயங்கும் கணிணிகள் தாம். நாம் வாங்கும் மென்பொருள் ஒரு கணிணிக்கு மட்டுமே ,  மற்றவர் பயன்படுத்த முடியாது.அதனால் தான் அவர்உலகப்  பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.ஆசியாவின் முக்கால் சதவிகிதம் பேர் திருட்டு  மென்பொருளாக பலரும் மறுபதிப்பு செய்து பயன்படுத்துவதாக  என்று ஒரு ஆய்வு அறிக்கை  கூறுகிறது . 

      லினக்ஸ் சுதந்திர  மென்பொருள் முதல் மூலப்பொருள்கள் வரை எப்படி வேண்டும் ஆனாலும் மாற்றி அமைத்து கொள்ள உரிமை அளிக்கிறது. லினக்ஸ் இல் 50 மேல்  பல வகையான இயங்கு தளம் உள்ளது.அவற்றில் மிகச்சிறந்த  சிலலினக்ஸ்  Ubuntu, ,xubuntu, lubuntu,open SUSE, Linux mint ,fedora, fuduntu .முதலில் பயன் படுத்தும் போது சிறிது சிரமமாக இருக்கும் .ஆனால் பல அடிப்படை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.ஒரு கணினியில் வன்தட்டில் பல பகுதிகளாக பிரித்து பயன் படுத்துவோம்.தமிழக அரசு வழங்கிய மடிக் கணிணியில் இரண்டு இயங்கு தளம் நிறுவி கொடுத்து இருக்கிறார்கள்.ஒரு கணிணியில் அதிக பட்சமாக 4 இயங்கு தளங்கள் (Operating System) வரை  நிறுவ முடியும். கணிணியில்வன்தட்டில்(hard disk)  நிறுவ விரும்புவர்கள் விண்டோ  உடன்  இரட்டை  இயங்கு (double booting) தளங்களை  நிறுவலாம்
4 இயங்கு தளங்கள் நிறுவப்பட்ட கணிணி

       முதலில் முதலாக    லினக்ஸ் இயங்கு தளம் நிறுவி பார்க்கலாம் என எண்ணுபவர்கள்   oracle virtual box, vmware player. இதில் ஒரு மென்பொருளை நிறுவி பயன் படுத்தலாம் .இதில் sun virtual box இலவச மென்பொருள் ,vmware workstation கட்டண மென்பொருள்.இந்த மென்பொருள்களில் எத்தனை இயங்கு தளங்களையும் நிறுவி கொள்ளலாம் அதற்கு ஏற்ப கணிணியின்  நினைவகமும்(Ram) ,வேகமும் (processor)வேண்டும்.இயங்கு தளம்தேவை இல்லை என்றால் எளிதில் அழித்து விடலாம் . USB வைத்து  pen drive linux ,unetbootin . linux live usb இல் கூட வைத்து பயன் படுத்தலாம் .5 G.B இடம் இருந்தால் போதும் நிறுவி விடலாம் . திருப்தி இருந்தால் மட்டும் கணினியில் நிறுவலாம்.

விண்டோவின்  பலம் மற்றும் பலவீனம்
  1. எளிதில் யாவரும் பயன் படுத்த முடியும்.
  2. கட்டண  மென்பொருள் ,     இயங்கு தளம் மட்டும் இன்றி எல்லா மென்பொருள்களும்  பணம் கொடுத்து வாங்க வேண்டும்
  3. கணிணி வைரஸ்கள்  மற்றும் உளவு பார்க்கும் அபாயம் உண்டு .
  4. எளிதில் கணிணி செயல் இழக்கும் அபாயம் உண்டு.
  5. மென்பொருளை  பயன்படுத்த மட்டுமே உரிமை உண்டு ,மூலநிரல்களை மாற்றி அமைக்கவோ  ,பிரதி  எடுக்கவோ உரிமை இல்லை.
  6. மற்ற இயங்கு தளம்  நிறுவி இருந்தால் அதை கண்டு கொள்ளாது.
     லினக்ஸ்ன் பலம் மற்றும் பலவீனம்
  1. முற்றிலும் இலவச இயங்கு தளம்  .
  2. அலுவலக மென்பொருள்  முதல் புகைப்பட மென்பொருள் என்று பல தரப்பட்ட  மென்பொருள் தொகுப்பு இலவசமாக கிடைக்கிறது.
  3. கணிணி வைரஸ்கள்  மற்றும் உளவு பார்க்கும் அபாயம் இல்லை .
  4. மென்பொருளை  பயன்படுத்த மட்டுமே உரிமை உண்டு ,மூலநிரல்களை மாற்றி அமைக்கவோ  ,பிரதி  எடுக்கவோ உரிமை உண்டு .
  5.  எளிதில் கணிணி செயல் இழக்கும் அபாயம் இல்லை.
  6. மாறுபட்ட  வகைளில் (GNOME, KDE)கிடைக்கிறது.
  7. பயன்  படுத்துவது  முதலில் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
    மற்ற இயங்கு தளம்  நிறுவி இருந்தால் அதையும் சேர்த்து கொண்டு , விரும்பும்  இயங்கு தளத்தை  இயக்க முடியும்.

    குறிப்பு : 
             நேரம் மிகுதியாக இருப்பவர்களும் ,   கணிணியில் நல்ல அனுபவமும் உள்ளவர்களையும்  தவிர மற்றவர்கள்  sun virtual box, vmware workstation player ல் நிறுவி பார்த்தே நல்லது . கணிணியில்வன்தட்டில்(hard disk)  நிறுவ விரும்புவர்கள்  முன்னதாக முக்கியமான கோப்புகள் , தரவுகளை  தரவிறக்கம் செய்து கொள்வது நல்லது.வெளியில் வைத்து பயன்படுத்த கூடிய  வன்தட்டு ( external hard disk)இருந்தால் அதில் நிறுவலாம்.நிலையான  பதிப்பை தரவிறக்கம் செய்வது நல்லது. Ubuntu ,xubuntu, lubuntu ,fedora,open SUSE மட்டும் உதவி கேட்டு கேள்வி எழுப்பினால் உடனடியாக உதவி கிடைக்கும்.மற்றவற்றில்  கொஞ்சம் சிரமம் தான்.
   
          தற்பொழுது வரை விண்டோ தான்  ,எதிர்காலம் மாற்றம் வரும் என்று நம்புவோம்.  பதிவு எழுதி நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்சியாக இருக்கிறது. உங்கள் கருத்துகளைகூறுங்கள் !

7 comments:

  1. விண்டோஸ் லினக்ஸ் பற்றிய தகவல்கள் பயனுள்ளவை . விண்டோஸ் 8 சோதனை பதிப்பை நிறுவலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல முடிவு ,லினக்ஸ்யும் ஒரு முறை நிறுவி பாருங்கள் .

      Delete
  2. லினக்ஸ்யை ஒருமுறை பயன்படுத்தினால் மற்றவை பிடிக்காது...

    குறைநிறை விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பலவிதமான லினக்ஸ் இருக்கிறது .வருகைக்கு நன்றி !

      Delete
  3. மரியாதைக்குரியவரே,வணக்கம்.லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆசைங்க.ஆனால் என்னைப்போன்ற ஓட்டுனர்களுக்கு (தொழில்நுட்பக்குறைகள் உள்ளவர்களுக்கு) சாத்தியமாகுமா?என்பதுதாங்க சந்தேகமாக உள்ளது.தங்களது பதிலுக்காக
    ஆவலுடன்
    Parameswaran C -கொங்குத்தென்றல்-வலைப்பூ...
    Thalavady-erode dist.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா ,தங்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஒன்றே போதும்.பதிவில் எழுதி இருப்பதை போல பெண் ட்ரிவில் (pen drive 8 GB) நிறுவி வைத்து உபயோகம் செய்து பார்க்கலாம் .அல்லது sun virtual Box இல் வைத்து பயன்படுத்தலாம் .திருப்தி இருந்தால் கண்ணியில் நிறுவலாம் .

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !