 |
கட்டுமாடு |
முதலில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி .தமிழர்களின் முதன்மையான உழவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழவர் திருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறோம் .பல நாடுகளில் இது அறுவடை திருநாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று நலிந்து வருகிற தொழில் இதுவும் ஓன்று.
உழுதவர் கணக்கு பார்த்தால் கலப்பை கூட மிஞ்சாது .உழவர்களுக்காக உதவிய காளைகளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக மாட்டு பொங்கல் . ஆண்கள் வீரத்தை நிலை நாட்ட களைகளை அடக்கி வீரத்தை வெளிபடுதுவேர் .அடக்கிய வீரர்களுக்கு பரிசும் பணமுடிப்பும் உண்டு .
 |
சீறிபாயும்காளை |
சிராவயல் தமிழகத்தில் சிவகெங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து 14 கி .மீ தொலைவில் உள்ளது.பிள்ளையார்பட்டி கிராமத்தில் பின்புறம் இருக்கிறது.வருடந்தோறும் காணும் பொங்கல் அன்று மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.வெளிநாட்டு பயணிகளும் மக்களும் சுமார் 2 இலட்சம் பேர் வரை வருகை தந்துகண்டு களிக்கிறார்கள் . முன்பு களைகளை திறந்த வெளியில் கட்டு அவிழ்த்து விடுவார்கள் .மாடுகளை பிடிப்பவர்கள்அங்கும் இங்கும்மாக இருப்பர்.மாடு முட்டி பலர் காயம் அடைவதும் ,ஒரு சிலர் இறப்பதும் உண்டு. இதில் சில பார்வையாளர்களும் அடக்கம் .
 |
Add caption |
இதனால் தமிழக அரசின் புதிய மஞ்சுவிரட்டு விதிகளின் படி பதிவு செய்த காளைகளும் ,பிடிப்பவர்களும் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.காளைகள் கால்நடை மருத்துவ குழு சோதனை செய்து தேர்ச்சி பேறற்ற காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.காளைகளும் ,பிடிப்பவர்களும் மது ,போதை பொருட்களை உட்கொண்டு இருக்க கூடாது.முதலுதவி செய்ய மருத்துவ குழுவும் ,அவசர முதலுதவி ஊர்தி நிற்க வேணும். காளைகளை நான்கு புறமும் பாதுகாப்பாக கம்புகளால் கட்ட பட்ட பகுதியில் மட்டுமே அவிழ்த்துவிடவேண்டும்.இதற்க்கு முதலில் அரசின் அனுமதியும் வைப்பு ரூ 2 இலட்சம்தொகை வைக்க வேண்டும்.
 |
பார்வையாளர்களின்ஒருபகுதி |
மாடுகள் அவிழ்க்கும் தொளுவிற்கு அருகே பல நூறு கனரக வாகனகங்களையும் அதன் மேல் நின்று மக்கள் ரசிப்பதையும் காணமுடிந்தது.
மாடு பிடிக்கும்தொழுவத்தை
சுற்றி கம்புகளை வைத்து கட்டாமல்கம்பி வலை வேலி அமைத்து இருந்தார்கள்
.வழக்கம் போல இளைஞர்களால் கம்புகளை உடைத்து கொண்டு உள்ளே செல்ல முடிய
வில்லை .ஆனால் காளைகள் அலட்சியமாக கம்பி வலை வேலியை பிளந்து சென்றது.வழி தவறிய காளை ஒன்று கூட்டத்தில் புகுந்து சிலரை காயப்படுத்தி விட்டது.
 |
அரைமணி நேரம் நின்ற காளை |
முன்னால் மந்திரி முதல் பல அரசியல் ,அதிகாரிகள் என்று பெரிய தலைகள் குடும்பதோடு வந்து இருப்பதை காணமுடிந்தது.காவல் துறை பல இடங்களில் நின்று உற்சாகமாக வழி மாற்றி விடுவதாக உணர முடிந்தது.வீட்டிற்க்கு தெரியாமல் வந்த சிறுவர்கள் தன் நண்பர் வீட்டில் இருப்தாக சொல்லி சாமாளிப்பதையும்,அவர்கைகளில் ஆப்பிள் கைத்தொலைபேசி இருப்பதையும் காணமுடிந்தது.மக்கள் வசதிக்காக அரசு சாராய கடைகளை அகல திறந்து வைத்து நன்றாகக கல்லா கட்டுவதையும் காண முடிந்தது.மஞ்சுவிரட்டுக்கு போவதாக சொல்லிவிட்டு போகும்போது புளிய மரத்தின் அடியில்சரக்கும் கையும்மாக இருப்பதையும் ,பலர் போதையில் விழுந்து கிடப்பதை காண முடிந்தது.
 |
இனிப்புகடை |
பொங்கல் சந்தையில்விற்க முடியாத கரும்பு கட்டுகளை பார்க்க
முடிகிறது.பலவகையான இனிப்பு கடைகள் , பலவிதமான ஐஸ் கிரிம், சிற்றுண்டி
வகைகளை வாகனங்களில் விற்கிறார்கள் . பட்டாணி ,சுண்டல் ,பஜ்ஜி ,புளியோதரை ,
லெமன் ,பிரியாணி உணவு வகைகள் மட்டும் குடிநீர் பல இடங்களில் விற்பனை
செய்வதை காண முடிந்தது.மதுரை மரிக்கொழுந்து ,மல்லிகை எங்கு பார்த்தாலும் காண முடிந்தது .இளநீர் ,மோர் ,கம்பங்கூழ் இன்னமும் பல கிடைத்தது.பலர் வாய்க்கும் கைக்கும் கடுமையான சண்டை போடுவது அப்பட்டமாக தெரிந்தது.
 |
காவலில் இருந்து சிறு ஓய்வு |
உயரம் ஒரு பெரிய தடை நின்று பார்த்தால்தெரியாமல் இருப்பதால் பனை மரத்தில்
சிலரும் ,உயர்மின் னழுத்த கோபுரத்தின் கம்பிகளிலும் நின்று ரசிப்பதை காண முடிந்தது.ஒரு சிலஉள்ளூர்ஊடக துறையையும் , நடமாடும்கழிப்பறையையும் காண முடிந்தது.இரு சக்கர வாகனங்களில் இளையர்கள் முதல் உற்சாக பானத்தின் உதவியால் போட்டி போட்டு கொண்டு பறப்பதை காணமுடிந்தது.வித்தியாசமாக ஒருவர் குதிரை வண்டியில் வந்து அசத்தினார் .மக்களுக்காக திடலில் குடிநீர் வசதி பல இடங்களில் செய்து இருப்பதை காண முடிந்தது.
 |
குதிரை வண்டி |
இந்த புதியவிதிகளின் பல கிராமங்களில் வைப்பு ரூ 2 இலட்சம்தொகை மற்ற
இதர செலவுகளும் செய்து வைக்க முடியாமல் மஞ்சுவிரட்டு
விடுபட்டுபோனதுண்டு.வருடந்தோறும் மாடுகளும் எண்ணிக்கை குறைந்தாலும்
பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. மஞ்சுவிரட்டு சல்லிகட்டு என்றும், சங்க காலத்தில்ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்பட்டது. மக்கள் ரசனை இருக்கும் வரை இந்த விளையாட்டு மறையாது .பலர் இதை மிருக வதை சட்டதை பயன்படுத்தி ஒழித்து கட்ட நினைப்பது தான் வேதனையாக தெரிகிறது.
 |
Add caption |
ஆங்காங்கே புகைப்படங்கள் இணைத்து எங்களையும் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற உங்களுக்கு நன்றி நண்பரே... சிறப்பான பகிர்வு.
ReplyDeleteநீண்ட நாளுக்கு பிறகு வலைப்பக்கம் வருகிறீர்கள் .தொடருந்து வாருங்கள் .
Deleteகோவை சரளா இந்த வலைத்தளத்தில் இணைந்ததற்கும் ,வருகைக்கும் நன்றி !
ReplyDelete