Jul 27, 2012

ஈஸ்ட்டர் தீவு

       உலக வரலாற்றில் அதிசய நிகழ்வுகள்  மர்மங்கள் பல உண்டு .அவற்றில் ஈஸ்ட்டர் தீவு  என அழைக்கபடும் பொலினீசியத் தீவு பற்றியது .இந்த தீவு சிலி தீவிலிருந்து 3,200 கி.மீ தள்ளி உள்ளது .இது கி.பி.1722இல் ஜேகப் ரகவீன் என்பவரால்  ஈஸ்ட்டர் தினத்தன்று கண்டு பிடிக்கப்பட்டதால் ஈஸ்ட்டர் தீவு என அழைக்கப்படுகிறது.இதன் பரப்பு 640 சதுர கி. மீ  ஆகும் .



     இந்த தீவில் மக்கள் கி.பி .300 முதல்  கி.பி.1100 வரை வாழ்ந்ததாக கணிக்கிடப்படுகிறது .இங்கு மக்களை ரப்பா என அழைக்கப்படுகிறார்கள் . கி.பி.400 இல் வழி தவறிய பொலினீசிய கப்பல்களில் வந்தவர்கள் திரும்ப முடியாமல் வாழ்ந்தனர் என நம்பப்படுகிறது.  பொலினீசியத் தீவு அருகில் ஆயிரம் மைல் வரை வேறு தீவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .


        பல்லாயிரமாக இருந்த மக்கள் தொகை இன்று 4400 பேர் மட்டுமே வாழ்கிறார்கள் .இவர்களது  தொழில் விவசாயமும் , மீன் பிடித்தலும் ஆகும் .
ஈஸ்ட்டர் தீவில் நீண்ட உருண்டையான மரங்கள் நிறைய இருந்திருகிறது.இந்த மரக்களை  கட்டு மரக்களாகவும் ,படகுகள் செய்யவும் பயன்படுத்தி இருக்கிறார்கள் . டால்பின் மீன்கள் தான் இவர்களது விருப்பமான
உணவாக இருந்தது .இதை  ருசிக்க வேட்டையாட  ஆயிரம் கி.மி .வரை கட்டு மரத்தில் சென்றுள்ளனர் .


.    
        தீவிலுள்ள மரங்கள்யாவும்  வெட்டபட்டதால் பறவை இனங்கள் அழிந்து போய் விட்டது .பறவை இனங்கள் இல்லாததால் மழை யின்  அளவு குறைந்து விட விவசாயமும் போய் மக்களை பஞ்சம் வாட்டியது.மரங்களும்  இல்லாததால் மீன் பிடிக்க முடியவில்லை .உணவுக்கு  வழியின்றி  மக்கள் ஒருவரயொருவர்  அடித்து தின்று கடைசியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துகிறார்கள்.கடைசியில் ஜேகப் ரகவீன்  எனும் இந்த மாலுமி வந்த பிறகு தான் வெளி உலகிற்கு தெரிந்தது .

      இந்ததீவுமுழுவதிலும் மனித முகம் கொண்ட  கற்சிலைகளை நிருவியிருகிறார்கள் .இந்த சிலைகள்  உயரம் 10 மீ் ட்டரும் வரையும்   எடை 80  டன் வரையும் இருக்கிறது  . இந்த தீவுவில்  மொத்தம் 887 சிலைகள் உள்ளது.இது அந்த காலத்தில் செய்திருப்பது  மிக அபூர்வமான ஒன்று .இந்த சிலைகளின் காது மட்டும் நீண்டதாக இருக்கிறது . அங்கு வாழ்ந்த இரு  இனக்களில் காது வளர்த்த இனத்தவர்கள், மற்ற இனத்தவர்களை  தங்களை சிலைகளாக செய்ய பயன் படுத்தி இருக்கிறார்கள் . இந்த சிலைகளை எதற்காக நிறுவினார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது . இது யுனுசுகோ உலக பரம்பரிய களமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !